மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி விபத்து; பெண் உட்பட இருவர் சாவு
12-Feb-2026
அலுவலகத்தில் வி.ஏ.ஓ., மர்ம சாவு
29-Jan-2026
ஜல்லிக்கட்டு முன்விரோதம் வாலிபர் வெட்டி கொலை
13-Jan-2026
கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு
12-Jan-2026
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்தால் இதுகுறித்து தாலுகாதோறும் நாளை (15ம் தேதி) நடைபெறவுள்ள குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கலாம். புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை அறவே ஒழிக்கும் விதமாக தாலுகா தோறும் நாளை காலை 10 மணி முதல் பகல் ஒருமணி வரை சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவு சங்க தனி அலுவலர், பஞ்சாயத்து தலைவர், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ரேஷன் கார்டுகள் மற்றும் ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, முறைகேடுகள் நடப்பது தெரியவந்தாலோ அதுகுறித்து கூட்டத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை தாலுகா கீழப்புலவன்காடு, ஆலங்குடி தாலுகா வேங்கிடகுளம், திருமயம் தாலுகா இளஞ்சாவூர், குளத்தூர் தாலுகா களமாவூர், இலுப்பூர் தாலுகா வடுகபட்டி, கந்தர்வக்கோட்டை தாலுகா கொத்தம்பட்டி, ஆவுடையார்கோவில் தாலுகா குருங்களூர், அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு, மணமேல்குடி தாலுகா விச்சூர், பொன்னமராவதி தாலுகா முள்ளிப்பட்டி, கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி கிராமங்களில் இக்கூட்டம் நடக்கிறது.
12-Feb-2026
29-Jan-2026
13-Jan-2026
12-Jan-2026