உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கல்

மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கல்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கண்ணக்கன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் புதுகை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தினர் இலவசமாக நோட்டு, பேனா வழங்கினர்.பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் வீரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார். அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு, பேனா ஆகியவற்றை விஜயராமன், கோவேதகன் ஆகியோர் வழங்கினர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமர் பேசினார். விழாவில், மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி