உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்

மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கியதில், 28 ஆடுகள் பலியாகின. அதிர்ச்சியில் மயங்கிய பாட்டி, பேத்தி இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று பல்வேறு பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்தது.கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் நேற்று பெய்த கன மழையின் போது, மின்னல் தாக்கியதில், அங்கிருந்த முருகன், 55, என்பவரின் 8 வெள்ளாடுகள், மாரியம்மாள், 48, என்பவரின் 15 செம்மறியாடுகள், ஐந்து வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.இடி தாக்கி ஆடுகள் இறந்த சோகத்தில், முரட்டுசோழகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள், 60, அவரது பேத்தி இளவரசி, 17, ஆகியோர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை