காண்டாமிருக கொம்புகளை விற்க முயன்ற 3 பேர் கைது
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன உயிரினங்களின் கொம்புகளால் செய்யப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.திருமயம் வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்ட போது, காரைக்குடியைச் சேர்ந்த ரவிமுகமது, 46, ராஜாமுகமது, 54, பக்ருதீன் அலி, 39, ஆகியோரிடம் இருந்து மூன்று காண்டாமிருகக் கொம்புகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பேரையும், வனத்துறையினர் கைது செய்து, காண்டாமிருகக் கொம்புகளை பறிமுதல் செய்து, திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.