உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக, கடந்த மாதம் 25ம் தேதி கூறப்பட்டது.சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் மாதிரியை சேகரித்த ஊரக வளர்ச்சி துறையினர், அந்த நீரை திருச்சியில் உள்ள குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.பரிசோதனையின் முடிவுகளில், அந்த குடிநீரில் மாட்டுச்சாணம் உள்ளிட்ட எவையும் கலக்கப்படவில்லை; அந்த நீர் குடிக்க உகந்த நீர் என, 29ம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்தன.இந்நிலையில், 'இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை; ஒரு தலைப்பட்சமாக விசாரித்துள்ளனர். வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்' என கோரி, கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த சண்முகம், 49, என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, கடந்த 15ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை நேற்று துவக்கினர்.சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., தில்லைநடராஜன் தலைமையில், டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று அந்த பகுதியை பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணையை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ