உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / 1984ல் நடந்த முறைகேடுக்கு 41 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

1984ல் நடந்த முறைகேடுக்கு 41 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

புதுக்கோட்டை:கலிங்கல் வெட்டியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக 41 ஆண்டுகள் கழித்து பொதுப்பணித் துறை ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், மூட்டாம்பட்டியில் ஆரணி குளத்தில், 1984 - -85-ம் நிதியாண்டில் கலிங்கல் வெட்டியதில், 1 லட்சத்து, 51,000 ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது குறித்து, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில், 1989-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அப்போது, பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் பிரபாகரன், தங்கரத்தினம், பணி ஆய்வாளர் நடராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்து.புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய தங்கரத்தினம், பிரபாகரன் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், தற்போது 83 வயதாகும் நடராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை