வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே வேலையாப் போச்சு
மேலும் செய்திகள்
திருமயம் மலைக்கோட்டை ஆக்கிரமிப்பு
21-Dec-2025
பண தகராறில் வாலிபரை கொன்ற இருவருக்கு காப்பு
15-Dec-2025
அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி விபத்தில் பலி
02-Dec-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில், 35க்கு மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர்.அப்பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து, குடிநீர் கலங்கலாக வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதில் மாட்டு சாணம் கலந்துள்ளதை அறிந்தனர்.மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக, கந்தர்வக்கோட்டை பி.டி.ஓ., மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்த குடிநீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஓராண்டுக்கு முன், குடிநீரில் மலம் கலந்ததாக எழுந்த புகாரில் இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேலையாப் போச்சு
21-Dec-2025
15-Dec-2025
02-Dec-2025