100 நாள் வேலை பொறுப்பாளர் பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சேந்தன்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனிதா, 35, இவர் சேந்தன்குடி ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தில், பணித்தள பொறுப்பாளராக பணிபுரிகிறார். இவருடன் பணிபுரியும் இதே பகுதியை சேர்ந்த பவானி, 33, ஆகிய இருவரும், நேற்று டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் சென்றனர். திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவனிதா உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த பவானி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.