உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கதண்டு கடித்து 11 பேர் அட்மிட்

கதண்டு கடித்து 11 பேர் அட்மிட்

புதுக்கோட்டை,:கந்தர்வக்கோட்டை அருகே, கதண்டுகள் கடித்ததில், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில், 11 பேர் பாதிக்கப்பட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே, கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, 80, என்பவர் வயது முதிர்வு காரணமாக, நேற்று இறந்தார்.நேற்று மாலையில் நடந்த இறுதி ஊர்வலம் மயானம் அருகே சென்றபோது, கொள்ளிச்சட்டியில் இருந்து கிளம்பிய புகையால், ஆலமரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து, ஊர்வலத்தில் சென்றவர்களை கடித்தன.இதில், பாதிக்கப்பட்ட 11 பேரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி