உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / நின்ற பஸ் மீது லாரி மோதி 15 மாணவர்கள் காயம்

நின்ற பஸ் மீது லாரி மோதி 15 மாணவர்கள் காயம்

கறம்பக்குடி:மழையூர் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்ற தனியார் பஸ்சின் பின்னால் டிப்பர் லாரி மோதியதில், பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட, 15 பேர் படுகாயம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி நேற்று காலை சென்ற தனியார் பஸ், மழையூர் மறவன்கொல்லை பஸ் ஸ்டாப்பில் நின்று பயணியரை ஏற்றிகொண்டிருந்த போது, வேகமாக வந்த டிப்பர் லாரி, தனியார் பஸ் பின்னால் மோதியது.இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட, 15 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை உடனே மீட்டு, மழையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தொடர்ந்து, காயமடைந்தவர்களில் 13 பேர் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இதில், பலத்த காயமடைந்த, இருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.இந்த விபத்து குறித்து, மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை