மேலும் செய்திகள்
குன்றத்து கோயிலில் நெல்லி மர பூஜை
25-Nov-2024
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை அருகே காட்டுநாவல்பட்டி பகுதியில் அருள்மாரி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை, தனியார் வேன் ஒன்று மாணவ - மாணவியரை அந்த பள்ளிக்கு ஏற்றிச் சென்றது.கந்தர்வகோட்டை அருகே அம்மாபுதுப்பட்டி பகுதியில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த, 25 மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்தோர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தர்வகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25-Nov-2024