குரங்கு கடித்து 6 மாத குழந்தை படுகாயம்
புதுக்கோட்டை,: தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த ஆறு மாத பெண் குழந்தை, குரங்கு கடித்ததில் படுகாயமடைந்தது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, தீத்தான்விடுதியை சேர்ந்த சண்முகம் மகள் அனன்யா; ஆறு மாத குழந்தையான அனன்யாவை, நேற்று மதியம், வீட்டின் போர்ட்டிக்கோவில் உள்ள தொட்டிலில் துாங்க வைத்திருந்தனர். அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, அனன்யாவின் தலையில் கடித்துள்ளது. குரங்கு கடித்ததில், தலையில் பலத்த காயமடைந்த அனன்யாவை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.