உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மொபட்டில் இருந்து விழுந்து 5 மாத குழந்தை உயிரிழப்பு

மொபட்டில் இருந்து விழுந்து 5 மாத குழந்தை உயிரிழப்பு

ஆவுடையார்கோவில்; புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே கண்ணக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆண்டனி, 26. இவரின் தங்கை அஜித்தா, 24. இவரது மாமியார் நட்சத்திரா, 52. இவர்கள் மூவர் மற்றும் அஜித்தாவின் ஐந்து மாத பெண் குழந்தை லிபியா ஆகியோர் நேற்று மாலையில், 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி'யில், அறந்தாங்கி பகுதியிலிருந்து, கன்னங்குடி நோக்கி சென்றனர். ஸ்கூட்டியை ஆண்டனி ஒட்டி சென்றார்.அப்போது, ஆவுடையார்கோவில் அருகே கரூர் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ்சுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், அஜித்தாவின் ஐந்து மாத குழந்தை, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. கரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை