உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆசிரியராக பாடம் எடுத்த கலெக்டர்

ஆசிரியராக பாடம் எடுத்த கலெக்டர்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஒரு மாணவியிடம் பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடத்தை வாசிக்க கலெக்டர் கூறினார். அந்த மாணவி பாடத்தை சரியாக படித்ததால், கலெக்டர் அருணா அவரை பாராட்டி, சாக்லேட் வழங்கினார்.ஒரு மாணவனுக்கு சாக்லேட்டை கொடுத்து, ஒரு பாடத்தை படிக்கக் கூறினார். அப்போது, அந்த மாணவன் திக்கித் திக்கி படித்தார். அவர் தவறாக படித்த பாடங்களை, கலெக்டர் ஆசிரியராக மாறி மாணவனுக்கு வாசிக்கும் திறனை கற்றுக் கொடுத்தார்.தொடர்ந்து அவர், ''திக்கித் திக்கி படிக்கும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களது படிப்புத் திறனை ஊக்கப்படுத்த வேண்டும். ''அடுத்த முறை நான் ஆய்வுக்கு வரும்போது, மாணவர்களிடம் கேள்விகளை கேட்பேன். அதற்குள் அந்த மாணவர்களை நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும்,'' என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி