உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / தனியார் நிறுவன டிரைவர் ரூ.82 லட்சத்துடன் ஓட்டம்

தனியார் நிறுவன டிரைவர் ரூ.82 லட்சத்துடன் ஓட்டம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சூப்பர்வைசர் சதீஷ்குமார், 37, உதவியாளர் கார்த்திக், 32, ஆகியோர் நேற்று அந்த நிறுவனத்தில் இருந்தது, 82 லட்ச ரூபாய் பணத்தை சாக்கு முட்டையில் கட்டி காரில் எடுத்து சென்றனர். காரை நிறுவனத்தின் டிரைவர் லட்சுமணன், 25, ஓட்டினார்.புதுக்கோட்டை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் பிடிக்கும் போது, சூப்பர்வைசர் மற்றும் உதவியாளர் காரில் இருந்து இறங்கிய போது, டிரைவர் லட்சுமணன் காரில் இருந்த 82 லட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.இயற்கை உபாதை கழித்து காருக்கு திரும்பிய இருவரும் அதிர்ச்சி அடைந்து, திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சந்தேகத்தின்படி, அந்த டிரைவருக்கு உதவிய இருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி, குழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்கு முட்டையிலிருந்த 75 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அந்த இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ