உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் ஒருவர் பலி

ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் ஒருவர் பலி

புதுக்கோட்டை:விராலிமலை அருகே பாப்பாபட்டியில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை ஏட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் பிரவீன், 17, இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை வாங்குவதற்காக, நேற்று விராலிமலை அருகே பாப்பாபட்டி பகுதியில் விவசாயி, பரமசிவம் என்பவரின் வீட்டிற்கு ஜல்லிக்கட்டு காளையை பார்க்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, ஜல்லிக்கட்டு காளை பிரவீனை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த பிரவினை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பிரவீனை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து, விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து, வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ