உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

புதுக்கோட்டை; பொன்னமராவதி அருகே சாலையில் சென்ற கொண்டிருந்த மொபட் திடீரென தீப்பற்றி எரிந்ததில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை, 36, இவரது மகன் ராஜிவ், 9, மகள் ரஞ்சிதா, 17. இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு அவரது, டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார். அப்போது, கேசராபட்டி அருகே எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில், மொபட்டில் முன் பகுதியில் அமர்ந்து சென்று சிறுவன் ராஜிவ் பலத்த காயமடைந்தார்.மொபட்டை ஓட்டிச் சென்ற பூஞ்சோலை, இவரது பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சிதா லேசான காயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடன் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜிவ், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பொன்னமராவதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஏப் 03, 2025 10:40

கண்டவனெல்லாம் டூ வீலர் தயாரிச்சு கண்டவனுக்கெல்லாம் வித்து கதி சக்தி போடு போடுன்னு போடுது.


Dandanakka
ஏப் 04, 2025 08:09

உன்னுடைய புத்திய இதிலும் காட்ட வேண்டாம்.


N Sasikumar Yadhav
ஏப் 04, 2025 12:57

கோபாலபுர கொத்தடிமைகளுக்கு உடம்பெல்லாம் மூளை .


புதிய வீடியோ