உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் சேதம்

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் சேதம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அத்தாணியில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அதே பகுதியில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக மூடி வைக்க உரிய தார்ப்பாய் வசதி இல்லை. சில நாட்களாக பெய்த மழையில் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து, நெல்மணிகள் முளைத்து சேதமாயின. அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஊர்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், போலியாக, விவசாயிகள் பெயரில், நெல் வியாபாரிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். 'இதை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை