ஜெகபர் அலி கொலை வழக்கு மாற்றம்
புதுக்கோட்டை:திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஆர்.ஆர்., கல் குவாரி உரிமையாளர் ராசு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., அபிஷேக்குப்தா பரிந்துரையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.