உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு, புனித விண்ணேற்பு அன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம்.இந்தாண்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால், மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.தொடர்ந்து, வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளை புதுக்கோட்டை கலெக்டர் அருணா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறம் தடுப்புகள், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், உள்ளுர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.தமிழகத்தில், 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது, வழக்கம் போல தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை