உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / போலீஸ் எஸ்.ஐ., எனக்கூறி கஞ்சா கடத்திய நபர் கைது

போலீஸ் எஸ்.ஐ., எனக்கூறி கஞ்சா கடத்திய நபர் கைது

புதுக்கோட்டை:மணமேல்குடி அருகே போலீஸ் எஸ்.ஐ., எனக்கூறி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி போலீசார் நேற்று இரவு கீழமாந்தாங்குடி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ், 26, பைக்கில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது, தான் புதுக்கோட்டை கைரேகை பதிவு போலீஸ் எஸ்.ஐ., எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். போலீசார் அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனை செய்த போது, அதில், கஞ்சா பொட்டலங்களும், ஒரு ஏர்கன் துப்பாக்கி மற்றும் போலி போலீஸ் ஐ.டி., கார்டு இருந்தது. தொடர்ந்து, பிரித்திவிராஜை கைது செய்து, அவரிடமிருந்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள், துப்பாக்கி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை