உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மண்டையூர்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் - ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன், 18; மகள் பவித்ரா, 16. மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பவித்ரா, பெற்றோர் கண்டித்தும் மொபைல் போனில் மூழ்கி கிடந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அவர், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த போனை பறித்து, துாங்க செல்லுமாறு மணிகண்டன் அறிவுரை கூறியுள்ளார்.ஆனால், போனை திருப்பிக் கேட்டு சண்டையிட்டதால், மணிகண்டன் தரையில் வீசி உடைத்துள்ளார். மனமுடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற மணிகண்டனும் குதித்தார். நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி இறந்த நிலையில், பவித்ரா, மணிகண்டன் இருவரையும் மீட்டனர். மண்டையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Natchimuthu Chithiraisamy
பிப் 18, 2025 11:30

மக்கள் தொகை அதிகமானதால் மனித உயிர் மதிப்பு குறைந்து விட்டது. அண்ணன் பாவம் குடும்பம் பாவம் இந்த செய்தி சொல்லுவது என்னவென்றால் வாழுங்கள் நல்ல முறையில் என்று இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துகிறது.


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 09:27

மொபைல் போன், கார் விற்பனையை அரசு துறை சார்ந்து கொண்டு வரவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 18, 2025 08:46

தலைப்பில் "பலி" என்று இருக்கிறது. ஆனால், செய்தியில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று இருக்கிறது.


Shekar
பிப் 18, 2025 09:32

அண்ணே முதல் லைனையும், கடைசி லனையும் பார்த்திட்டு, மத்ததெல்லாம் ஸ்கிப் பண்ணாதீங்க. இறந்த நிலையில் அப்படின்னு ஒரு வார்த்தையை படிக்காம விட்டுடீங்க


Sureshkumar
பிப் 18, 2025 09:40

இறந்த நிலையில் மீட்டனர், சரியாக படிக்கவும்.


KRISHNAN R
பிப் 18, 2025 07:20

இது செய்தி அல்ல படிப்பினை


Saai Sundharamurthy AVK
பிப் 18, 2025 07:16

பொதுவாக இளம் வயது பெண்கள் கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து கொண்டு விடுவார்கள். அவர்களை கண்டிக்காமல், பேச்சில் நயமாக இருந்து, அன்புடன் அரவணைத்து செல்வது தான் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் நல்லது.


Natchimuthu Chithiraisamy
பிப் 18, 2025 11:33

தேடியதுடன் ஒட்டி போகவேண்டும் ஏதாக இருந்தாலும் என்பது சரியல்ல


Chandrasekaran Balasubramaniam
பிப் 18, 2025 11:44

உண்மை. இந்த காலத்தில் அரவணைத்து அட்வைஸ் செய்யதான் வேண்டும். இளைஞர்களிடத்தில் திடமனது இல்லை.


Raj
பிப் 18, 2025 06:59

பாவம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த தலைமுறை குழந்தைகளுக்கு முன்கோபம், சிந்திக்கும் திறன் இல்லாமல் வளருகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு கூட கைபேசியை கொடுத்து தானே உணவு கொடுக்கிறார்கள். கலி காலம் அல்ல கைபேசி காலம்.


Balasubramanian
பிப் 18, 2025 05:41

Time Pass என நேரம் கடத்த உபயோகப் படும் ஒரு சாதனம் இவர்களின் Time Pass ஆகும் படி வாழ் நாள் போகும் படி செய்து விட்டதே! அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்


Priyan Vadanad
பிப் 18, 2025 05:30

அன்பான அண்ணன் தங்கை. உரிமையான கோபம். சில்லறை கோபம் கல்லறைக்குப் போகச் செய்துவிட்டது.


முக்கிய வீடியோ