உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி

டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி

புதுக்கோட்டை:டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடி சென்றதால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் இருந்து கீரனுார் செல்லும் சாலையில், டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, நேற்று காலை அவ்வழியாக, பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் சென்றபோது, டிரான்ஸ்பார்மர் திருடப்பட்டு, உதிரி பாகங்கள் கீழே கிடந்துள்ளன.இதனால், அதிர்ச்சியடைந்த மின்வாரிய ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி, மின்வாரிய அதிகாரிகளும், ஆதனக்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், மாவட்டம் முழுதும் பல மாதங்களாக, மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள், ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வது, மின்வாரிய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி