முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மர்ம மரணம்
புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டம், அரியணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன், 20, முருகானந்தம், 22, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.அதன்பின், பல மணி நேரமாகியும், வீடு திரும்பாததால் உறவினர்கள் இருவரையும் தேடினர். தொடர்ந்து, இருவரும் அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இறந்து கிடந்தனர். தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறியதாவது:மின்சாரம் பாய்ந்து இரண்டு இளைஞர்களும் இறந்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தோட்டத்துக்காரர்கள் யாரேனும் அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்த இளைஞர்களின் உடலை, வனப்பகுதியில் வீசினார்களா அல்லது மின் ஒயர் ஏதேனும் அறுந்து கிடந்து அதை மிதித்து இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.