மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
19-Aug-2025
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நல்லாண்டார்கொல்லையைச் சேர்ந்தவர் ரெங்கதுரை, 39; இவரது மனைவி யோகா, 33. இந்த தம்பதிக்கு அஸ்வந்த், 4, என்ற மகன் உள்ளார். சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ரெங்கதுரை, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் மீண்டும் சிங்கப்பூர் செல்ல, செப்., 14ல் ஏற்பாடுகள் செய்தார். 'வெளிநாடு செல்ல வேண்டாம்' என, யோகா கூறியதால், கணவன் -- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கோபித்துக் கொண்ட யோகா, ரெங்கதுரையின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாஸ்போர்ட்டை ரெங்கதுரை தேடியபோது காணவில்லை. யோகாவிடம், பாஸ்போர்ட் எங்கே? என ரெங்கதுரை கேட்டதற்கு, அதை எரித்து விட்டதாக கூறியுள்ளார். வெளிநாடு செல்ல முடியாத மன உளைச்சலில் இருந்த ரெங்கதுரை, வீட்டில் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Aug-2025