உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மருத்துவமனையில் மயக்க ஸ்பிரே அடித்த பெண் கைது

மருத்துவமனையில் மயக்க ஸ்பிரே அடித்த பெண் கைது

புதுக்கோட்டை: இலுப்பூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், மயக்க மருந்து 'ஸ்பிரே' அடித்த பெண் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோத்திரப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 56; விவசாயி. இவரது சகோதரர் சிவசாமி, 50. இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்தது. இதில், நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இரு தரப்பினரும், சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு, அங்கு சென்ற இரு தரப்பினரின் உறவினர்கள், மருத்துவமனைக்குள்ளேயே கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெண் தன் கையில் வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்ததால், அது மருத்துவமனை முழுதும் பரவியது. இதில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், செவிலியர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இலுப்பூர் போலீசார், கோஷ்டி மோதலில் காயமடைந்தவர்களை, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க மருந்து ஸ்பிரே அடித்த சுஹாசினி, 40, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை