உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்றாண்டுகளில் ஆபத்தான நிலையில் புயல் காப்பகம் தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு

மூன்றாண்டுகளில் ஆபத்தான நிலையில் புயல் காப்பகம் தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு

சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூர் ஊராட்சி கன்னிகாபுரியில் தரமற்ற பணியால் கட்டப்பட்ட மூன்றாண்டுகளில் புயல் காப்பக கட்டடம் சேதமடைந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2018 ஏப்.,13ல் புயல் பாதுகாப்பு மைய கட்டடம் ரூ.3 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தரமற்ற பணியால் திறப்பு விழா கண்ட 3 ஆண்டுகளில் சேதமடைந்தது.பேரிடர் காலங்களில் கடற்கரையோர மக்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இடிபாடுகளுடன் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் உரிய முறையில் அரசு சார்ந்த துறை கூட்டங்கள் நடத்துவதற்கும் வழியில்லை. கன்னிகாபுரி பொதுமக்கள் கூறியதாவது:புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தை அதன் கட்டுமானப் பணி நடைபெறும் நேரத்தில் அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்ய வராமல் திறப்பு விழா நேரத்தில் மட்டுமே வருகின்றனர். தற்போது கட்டடத்தின் 60 சதவீதம் பணிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது.ஒரே நேரத்தில் 10 பேர் மாடிக்கு சென்றால் பால்கனி மற்றும் மாடிப்படி கீழே விழும் நிலையில் உள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் புயல் வெள்ள பாதுகாப்பு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கட்டடத்தை ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்காவிட்டால் விரைவில் கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி