தங்கச்சிமடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு 3ம் பரிசு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசுப் பள்ளி மாணவிகள், பாலிதீன் பைக்கு மாற்று பொருள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தி 3ம் பரிசு வென்றனர்.ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தில் 'நீடித்த நிலையான வாழ்க்கை முறை' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் கண்காட்சி விழிப்புணர்வு நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் தேசிய பசுமைப் படை மாணவர்கள் பங்கேற்றனர்.தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவிகள் மகிபா ஸ்லேசர், ஹர்ஷிகா இருவரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினர்.இதற்காக மாணவிகள் 3ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் ரூ.7000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜெரோம் பாராட்டினர்.இதனை மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.