உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொத்தனார் கொலை வழக்கில்  5 பேர் கைது 

கொத்தனார் கொலை வழக்கில்  5 பேர் கைது 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதுமடத்தில் கொத்தனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் உச்சிப்புளி போலீசார் 5 பேரை கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேனுார் பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் செல்வம் 38. இவர் புதுமடம் பகுதியில் தங்கியிருந்து கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு உதவியாக காரியாபட்டியை சேர்ந்த வினோத் 25, கணேசமுத்து 26, பூப்பாண்டி 23, மூவரையும் அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்.இவர்கள் அனைவரும்மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது. இதில் செல்வத்தை விட்டு விட்டு மற்ற மூவரும் வெளியில் சென்று விட்டனர். இரவு 12:30 மணிக்கு வினோத், கணேசமுத்து, பூப்பாண்டி, புதுமடம் முகமது ரியாஸ் 25, முகமது ரிஸ்வான் 27, ஆகியோர் வீட்டில் துாங்கி கொண்டிருந்த செல்வத்தை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீசார் வினோத், கணேசமுத்து, பூப்பாண்டி, முகமது ரியாஸ், முகமது ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை