இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு பணியில் 6200 போலீசார்
ராமநாதபுரம் : பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று (செப்.11)அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கட்சித்தலைவர்கள், அமைப்பினர் வர உள்ளதால் 6200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், வெளி மாவட்டத்தினர் அஞ்சலி செலுத்த வர உள்ளனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஒரு ஐ.ஜி., 3 டி.ஐ.ஜி.,க்கள், 20 எஸ்.பி.,க் கள், 26 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 61 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 6200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 150 கண்காணிப்பு கேமராக்கள், 5 டிரோன் கேமராக்கள், வாகனங்களை கண்காணிக்க 38 செக் போஸ்ட்கள், ஏழு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்துள்ளார். டூவீலர்களில் வரக்கூடாதுசட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அஞ்சலி செலுத்த கண்டிப்பாக டூவீலர்களில் வரக்கூடாது. பஸ் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தரப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சொந்த வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் மக்கள் வரலாம்.பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐ.ஜி.,