உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலவரக் கூட்டத்தை கலைக்கும் களப்பயிற்சி ஒத்திகை நடந்தது

கலவரக் கூட்டத்தை கலைக்கும் களப்பயிற்சி ஒத்திகை நடந்தது

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர நேரத்தில் கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி குறித்து அதிரடிப்படை போலீசார் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.கலவர நேரத்தில் கூட்டத்தை உயிர் சேதமின்றி போலீசார் கலைப்பதற்கு பல்வேறு கட்ட நிகழ்வுகள் உள்ளன. முதலில் கூட்டத்தினரை கலைந்து செல்ல எச்சரிக்க வேண்டும். அதன் பின் வஜ்ரா வாகனத்தில் இருந்து 140 மீட்டர் வரை செல்லும் புகை குண்டு வீசப்படும்.அதற்கு கூட்டம் கலையா விட்டால் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் கண்ணீர் புகை குண்டு வீசப்படும்.அடுத்து சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு வீசி புகை ஏற்படுத்தப்படும். அதன் பின் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுத்தும் கண்ணீர் புகை குண்டு வீசப்படும்.அதன் பின் காஸ் கண் மூலம் கூட்டத்தினரை நோக்கி சுடும் போது கலவரக்காரர்கள் உடலில் குறிகளை ஏற்படுத்தும். கூட்டம் போலீசாரை நெருங்கி வந்துவிட்டால் கிர்னெட் என்ற புகைக் குண்டு தரையில் வீசப்படும். அதிலும் கூட்டம் கலையாமல் இருந்தால் லத்தி சார்ஜ் செய்யப்படும். அதற்கும் அடங்காவிட்டால் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.இதுகுறித்த ஒத்திகை ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் தலைமையில் நடந்தது. அவர் புகைக் குண்டு வெடிப்பது, கிர்னெட் குண்டு வீசுவது போன்ற செயல் விளக்கம் செய்து காட்டினார்.இந்த ஒத்திகையில் 50க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி முருகராஜ், இன்ஸ்பெக்டர் தங்கமணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ