| ADDED : ஜூலை 12, 2024 04:11 AM
உத்திரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயிலில் பித்ரு கடன் போகவும், முன்னோர் சாபங்கள் நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் வேண்டி நாள்தோறும் வராகி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆடி உற்ஸவ விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு வராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.ஜூலை 19 காலையில் பால்குடம் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் மாலை 6:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் பூச்சொரிதல் விழா உள்ளிட்டவை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பெண்கள் மஞ்சள் வழிபாடு
பரமக்குடி: -பரமக்குடியில் நடக்கும் ஆஷாட நவராத்திரி விழாவில் வராகி அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் வராகி அம்மனுக்கு ஆசாட நவராத்திரி விழா நடக்கிறது. இங்கு தினமும் பெண்கள் மஞ்சள் அரைத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதன்படி காலை அபிஷேகம், மாலை சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் அருள் பாலிக்கிறார்.