உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் அறிவுரை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் அறிவுரை

திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு நியமிக்கபட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது. 424 பேர் கலந்து கொண்டனர். இதில் பயிற்சியாளர்கள் பேசியதாவது: மக்கள் கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கணக்கெடுப்பு மூலம் மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் தீட்டுவதற்கு உதவியாக இருக்கும். கணக்கெடுக்க செல்லும் போது அடையாள அட்டையை அணிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் இன்முகத்துடன் பேச வேண்டும். கணக்கெடுப்பின் நோக்கத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக ஆக.,1 முதல் 31 வரை வீடுகள் கணக்கெடுப்பு நடைபெறும். ஒரு வீடு கூட விடுபடாமல் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும் என பேசினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !