உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி வைகை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வு அவசியம்

பரமக்குடி வைகை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வு அவசியம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதிகளில் பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட சுவடுகளை தேடும் முயற்சியில் சில குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.வைகை ஆற்றின் கரையோரங்களை மையமாகக் கொண்டு பழங்கால மக்கள் தங்கள் வாழ்வியலை அமைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை துவங்கி ராமநாதபுரம் சென்று நிறைவடையும் வைகை கரையோரங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான ஏராளமான சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.இதில் கீழடி ஆய்வு முக்கிய செய்திகளை கூறுகிறது. பரமக்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் ஆறு மற்றும் கால்வாய்கள் என தண்ணீர் ஓடிய பாதைகளில் பழங்கால நாணயங்கள், கிணறுகள், பானை ஓடுகள் என அவ்வப்போது கண்டெடுக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் ஒவ்வொரு முறை தண்ணீர் பெருக்கெடுக்கும் பொழுதும் அதன் நீரோட்டத்திற்கு ஏற்ப சில குடும்பத்தினர் பழங்கால நாணயங்கள் மற்றும் சுவடுகளை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவற்றை வரலாற்று ஆய்வாளர்களிடம் கொடுத்து அவர்களுக்கான கூலியை பெறுகின்றனர்.இதே போல் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வைகையில் ஓடிய நிலையில் தற்போது ஆங்காங்கே நாணயங்களை தேடும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகள் பழைய நாகரீகத்தை மீட்டெடுக்க முடியும் என்றாலும் நாணயங்களிலும் வரலாறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றங்கரையோரங்களில் தொல்லியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டு பழங்கால வாழ்வியலை மீட்டெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

காரணிராஜன்
மார் 22, 2024 12:57

சீக்கிரமாவே அரமக்குடியில் வைகை ஆறுன்னு ஒண்ணு ஓடிச்சான்னு தொல்லியல் துறை ஆய்வு நடத்தும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை