ஆட்டோ டிரைவர் சாவு போலீசார் மீது புகார்
உச்சிப்புளி: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே துத்திவலசையை சேர்ந்தவர் பாலகுமார், 27. ஆட்டோ டிரைவரான இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் நாரையூருணி பகுதியில் இடது கண்ணில் காயத்துடன் மர்மமான முறையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இவரது உடலை போலீசார் எடுக்க உறவினர்கள் அனுமதிக்கவில்லை.உச்சிப்புளி பகுதியில் ராமநாதபுரம் - -ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சந்தீஷ் எஸ்.பி., சமரசத்தால் மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், பாலகுமார் நடந்து சென்றபோது போலீசார் விரட்டியதாக தெரிவித்து, அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், போலீசார் விரட்டியதில் தான் பாலகுமார் தடுமாறி விழுந்து இறந்தார்' என தெரிவித்துள்ளார். அஜித் தற்போது தலைமறைவாகிவிட்டார். பாலகுமார் உடலை வாங்க, உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. அதையடுத்து, அவரது உறவினர்களிடம் போலீசார் பேசி வருகின்றனர்.