உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரை சாலையில் பெருகும் விளம்பர போர்டுகள்; போக்குவரத்திற்கு ஆபத்து

கிழக்கு கடற்கரை சாலையில் பெருகும் விளம்பர போர்டுகள்; போக்குவரத்திற்கு ஆபத்து

கீழக்கரை; ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் நாளுக்கு நாள் விளம்பர போர்டுகள் வைக்கும் செயல் அரங்கேறுகிறது.கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட இடங்களில் அதிகளவு விபத்துக்கள் நடக்கும் இடங்களை கண்டறிந்து கடந்த 2020க்கு பிறகு அப்பகுதியில் சாலைகள் அகலப்படுத்தியும் பாலங்கள் ஏற்படுத்தியும் அவற்றில் வாகனங்கள் பயணித்து வருகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு சாலையோர தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்கும் செயல் அரங்கேறுகிறது. ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் சாலையில் செல்லும் போது விளம்பர பதாகைகளின் மீது பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் எவ்வித அனுமதியும் இன்றி முறைகேடாக இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்ந்து நீடிக்கிறது. ஒருவர் வைக்கும் பதாகையை பார்த்து வேறொரு நிறுவனங்களும் இதே போன்று கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து போர்டுகள் வைக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் சாலையோர விபத்துகளை ஏற்படுத்தும் போர்டுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை