பா.ஜ., அலுவலகம் திறப்பு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை அச்சுந்தன்வயல் பகுதியில் பா.ஜ., மாவட்ட அலுவலக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை கோவையில் இருந்து காணொளி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசினர்.இந் நிகழ்ச்சியை பா.ஜ.,வினர் பெரிய திரையில் ஒளிபரப்பினர். நிகழ்ச்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ., காந்தி, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தரணிமுருகேசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.