உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கம்யூ.,க்கள் முற்றுகைப் போராட்டம்

ராமேஸ்வரத்தில் கம்யூ.,க்கள் முற்றுகைப் போராட்டம்

ராமேஸ்வரம்: -மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு கம்யூ., கட்சிகள் முற்றுகையிட்டனர்.பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும், இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை படுகொலை செய்ததை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் அக்கட்சியினர் இருபிரிவாக பிரிந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கருணாகரன், மாரிமுத்து, அசோக், இந்திய கம்யூ., நிர்வாகிகள் முனீஸ்வரன், ஜோதிபாசு, வடகொரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை