உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாண்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பாலம்

துாண்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பாலம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மாங்குடி செல்லும் வழியில் உள்ள வரத்து கால்வாயை கடந்து செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின் துாண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.முதுகுளத்துார் அருகே மாங்குடி, சிறுமணியேந்தல், மேலக்கன்னிச்சேரி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். பேரையூரில் இருந்து கொல்லங்குளம் வழியாக மாங்குடி கிராமத்திற்கு ரோடு வசதி உள்ளது.இங்கு வழியில் வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலம் அமைக்கப்பட்டது. முறையாக பராமரிப்பின்றி தற்போது சிறுபாலத்தின் நடுவில் உள்ள துாண்கள் சேதமடைந்துள்ளது. இதனால் ஒரு பகுதி தாழ்வாக உள்ளது.இவ்வழியே செல்வோர் வேறுவழியின்றி சேதமடைந்த பாலத்தில் செல்கின்றனர். கால்வாயில் தண்ணீர் செல்லும் போது பாலம் முழுவதும் சேதமடைந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை