உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் மீது கார் மோதல்; ராமநாதபுரத்தில் 5 பேர் பலி

அரசு பஸ் மீது கார் மோதல்; ராமநாதபுரத்தில் 5 பேர் பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ராமேஸ்வரம் ரோட்டில் நின்றிருந்த அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, இருமகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் பலியாயினர்.கடலாடியை சேர்ந்தவர் ராஜேஷ் 34. இவர் தங்கச்சிமடம் நடுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து, அங்கு நகைகடையும் நடத்தினார். நேற்றுமுன்தினம் இரவு பிறந்து 12 நாளான ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அக்குழந்தையுடன் ராஜேஷ், மனைவி பாண்டிசெல்வி 30, மகள்கள் ஹர்ஷிதா ராணி 8, பிரனிகா ராணி 4, பாண்டி செல்வியின் தந்தை செந்தில்மனோகரன் 70, இவரது மனைவி அங்காளஈஸ்வரி 65, ஆகியோர் ராமநாதபுரத்திற்கு வந்தனர்.அங்கு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை பெற்றுவிட்டு பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்து வாடகை காரில் தங்கச்சி மடம் நோக்கி சென்றனர். காரை அக்காள்மடம் புயல்காப்பகம் பகுதியை சேர்ந்த சவரி பிரிட்டோ 33, ஓட்டினார்.திருப்புத்துாரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பஸ் சென்றபோது அதில் இருந்த மதுபோதை ஆசாமி ஒருவர் வாந்தி எடுத்ததால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். நேற்று அதிகாலை 12:20 மணிக்கு பிரப்பன்வலசை பகுதியில் தனியார் பள்ளி அருகே ராஜேஷ் குடும்பத்தினர் சென்ற கார், நின்று கொண்டிருந்த அந்த பஸ் மீது அதிவேகமாக வந்து பின் பகுதியில் மோதி நொறுங்கியது. இதில் ராஜேஷ், ஹர்ஷிதாராணி, பிரனிகா ராணி, செந்தில்மனோகரன், அங்காளஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அங்கிருந்த மக்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.பாண்டிசெல்வி, டிரைவர் சவரி பிரிட்டோ, குழந்தை ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
செப் 09, 2024 21:51

அந்த மதுபோதை ஆசாமிதான் காரணம். உருப்படாத திராவிடன். உதவாக்கரை திராவிடன். தண்ணி அடிச்சு, கண்டதை தின்னுட்டு வர்ரவனை ஏண்டா பஸ்ஸில் ஏத்துறீங்க?


சமீபத்திய செய்தி