உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் டயர் வெடித்து விபத்து

கார் டயர் வெடித்து விபத்து

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் செட்டிய தெருவை சேர்ந்தவர் கணேசன் 55. இவர் திருச்சியில் நடைபெற்ற நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பின் குடும்பத்தினருடன் காரில் ஊர் திரும்பினார். காரை டிரைவர் தனுஸ்குமார் 22, ஓட்டினார்.திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர். எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் கலக்குடி விலக்கு அருகே நேற்று காலை 7:30 மணிக்கு கார் சென்ற போது முன்பக்க டயர் வெடித்தது. இதில் இழுத்துச் செல்லப்பட்ட கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இதில் கணேசன் மனைவி சுபாஷினி 48, படுகாயம் அடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை