உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளுக்கான குறுவட்ட தடகளம்

மாணவிகளுக்கான குறுவட்ட தடகளம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில், பள்ளி மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக குழு விளையாட்டுகள், தடகளப்போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஆக. 19 முதல் 30 வரை நடந்தது. நேற்றுமுன்தினம் மாணவர்களுக்கு தடகளப்போட்டி நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாணவிகளுக்கு 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ