மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
கீழக்கரை : மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கீழக்கரை நகர் தலைவர் மாட முருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். ஓ.பி.சி அணி மாவட்டத் தலைவர் பாரதி ராஜன், நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ், விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜரினித், நிர்வாகிகள் ஹரிராஜ், சண்முகப்பிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்து பேசினர்.