உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகள் அவதி

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகள் அவதி

குறுகிய இடத்தில் நெரிசல்பரமக்குடி: பரமக்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குறுகிய இடத்தில் கர்ப்பிணிகள் அதிகமானோர் பங்கேற்றதால் நெரிசலில் சிரமப்பட்டனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி காட்டுப்பரமக்குடி தனியார் மகாலில் நடத்தப்பட்டது. 5 முதல் 7 மாத கர்ப்பிணிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பரமக்குடி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 175 பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் மதியம் 12:00 மணி நிகழ்ச்சிக்கு காலை 9:00 மணிக்கு வருமாறு கூறியதால் கணவர் மற்றும் உறவினர்களுடன் சிலர் 2, 3 வயதுள்ள குழந்தையுடன் வந்திருந்தனர். கர்ப்பிணிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டதால் சிரமம் ஏற்பட்டது.அனைவருக்கும் எம்.எல்.ஏ., முருகேசன் சீர் வரிசை பொருட்களை வழங்கினார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, தாசில்தார் சாந்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளின் உறவினர்கள் கூறுகையில், நிகழ்ச்சி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு அழைக்கப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.மேலும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊசி செலுத்த செல்லும் போது அங்குள்ளவர்கள் முறையாக பேசி கவனிப்பதில்லை என்றனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜூலி பெனிதா கூறுகையில், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு 100 பேர் வரை எதிர்பார்த்த நிலையில் 175 பேர் வந்தனர்.இதனால் நெரிசலான சூழல் ஏற்பட்ட போதும் அனைவருக்கும் உடனடியாக அனைத்து சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டு உணவு பரிமாறி அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை