உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு போட்டி

மாணவர்களுக்கு போட்டி

திருப்புல்லாணி : - திருப்புல்லாணியில் செயல்படும் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு கலாம் நினைவு நாளில் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ், மகளிர் தையல் பயிற்சி ஆசிரியர் சாந்தா சிமியோன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை