உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு போட்டிகள்

மாணவர்களுக்கு போட்டிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி தனித் தனி பிரிவாக நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் செய்தார். போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை