உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி துவக்கம்

திருப்புல்லாணி அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி துவக்கம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியது.இப்பள்ளி 1963 கட்டப்பட்ட ஓட்டுக்கட்டடத்தில்செயல்பட்டு வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் 2017ல் திறந்து வைக்கப்பட்டது.கொரோனா காலத்திற்குப் பின் அதிக மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு இட நெருக்கடியால் அவதிப்பட்டு வந்தனர். 1 முதல் 5 வகுப்பு வரை 220 மாணவர்களும் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ரூ.25 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.திருப்புல்லாணியைச் சேர்ந்த பெற்றோர் கூறியதாவது:தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடத்தை தரமான முறையில் கட்ட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகளின் மேற்பார்வையில் பள்ளிக்கு தரமான கட்டடம் கட்டுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ