மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
ராமநாதபுரம், : கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் லோகநாதன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் முருகையா முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத்தலைவர் ராதா, பொதுச் செயலாளர் ராஜன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் பேசினர்.கட்டுமான சங்க துணைத்தலைர்வகள் பாலு, உடையப்பன், சீதாலட்சுமி, துணை செயலாளர்கள் சரவணன், அழகர்சாமி, பாலமுனீஸ்வரன், பெண்கள் அமைப்பு பந்தானம், வனிதா, சண்முகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்கேற்றனர். வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி வழங்க வேண்டும். நல வாரியத்தில் உள்ள அனைவருக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுப்படி ஓய்வூதியம் மாதம் ரூ.2000 வழங்க வேண்டும். வீடு மானியம் ரூ.4 லட்சம் என்பதை 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.புதுச்சேரி நல வாரியத்தில் வழங்கும் போனஸ் போல் தமிழக தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
28-Aug-2024