சர்வீஸ் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
திருவாடானை சின்னக்கீரமங்கலம் மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு சேதமடைந்து மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மேம்பாலம் கட்டபட்டுள்ளது. இப்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் ரோடு உள்ளது. இதில் மதுரை ரோட்டிலிருந்து தேவகோட்டை செல்லும் ரோடு சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது.வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்திற்குள் செல்லாதவாறு எச்சரிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் தார்டிரம்கள் வைக்கபட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டை உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.