உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுவர் விளம்பரங்கள் அழிப்பு

சுவர் விளம்பரங்கள் அழிப்பு

திருவாடானை : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.இதையடுத்து சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டு வருகிறது. திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கீரமங்கலம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் சுவரில் பல்வேறு அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் இருந்தது.இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ